இலங்கையில் பயங்கரம் - ஒரே குடும்பத்தில் நால்வர் பலி
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயங்கரம் – ஒரே குடும்பத்தில் நால்வர் பலி

Share

இலங்கையில் பயங்கரம் – ஒரே குடும்பத்தில் நால்வர் பலி

தம்புத்தேகம – ஈரியகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வான் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்க தயாரான போது, ​​அதே திசையில் பயணித்த வான் ஒன்று லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் 36 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் ஆண்கள் 36 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கஹட்டலஸ்திகிலிய பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் 55, 11, 06 மற்றும் 08 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதிக வேகத்துடன் வேனை ஓட்டி வந்த சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லொரியுடன் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...