மனைவியின் தொடர்ச்சியான முறைப்பாட்டால் கணவனின் விபரீத முடிவு
இலங்கைசெய்திகள்

மனைவியின் தொடர்ச்சியான முறைப்பாட்டால் கணவனின் விபரீத முடிவு

Share

மனைவியின் தொடர்ச்சியான முறைப்பாட்டால் கணவனின் விபரீத முடிவு

புபுரஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்குள் விஷம் அருந்திய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஜதலாவ, பன்விலதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபரின் 25 வயது மனைவியுடன் சிறிது காலமாக தகராறு இருந்து வந்த நிலையில், இது குறித்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் போது மனைவியின் பின்னால் குறித்த நபரும் பொலிஸ் நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

மனைவி முறைப்பாடு செய்யும் போது மறைத்து வைத்திருந்த விஷப் போத்தலை எடுத்து குடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு, பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டு விஷப் போத்தலை பறித்து பின்னர் இந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பன்விலதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள ஒரு பணியிடத்தில் இருவரும் சந்தித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 4 வயதில் ஒரு பிள்ளையும் உள்ளது.

இருவருக்கும் இடையில் சில காலமாக தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், மனைவி புபுரஸ்ஸ பொலிஸில் இதற்கு முன்னர் 6 தடவைகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் 7வது தடவை முறைப்பாடு செய்யும் போதே அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...