உலகம்செய்திகள்

வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு

Share
வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு
வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு
Share

வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு

நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டமானது ஆயிரக்கணக்கான மக்களை வீதியில் இறங்கி போராட வைத்துள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிய நீதித்துறை மறுசீரமைப்புக்கான முதல் மசோதாவுக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் திங்களன்று ஒப்புதல் அளித்தது.

சில அரசாங்க முடிவுகளை நியாயமற்றதாகக் கருதினால் அவற்றை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களை இந்த மசோதா கட்டுப்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, சுமார் 95% மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் இஸ்ரேலிய மருத்துவ சங்கம் 24 மணி நேர போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக கூறியது.

ஆனால், ஜெருசலேமில் மருத்துவ பராமரிப்பு மற்றும் நாடு முழுவதும் அவசர சிகிச்சைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கமளித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிய சட்டத்திருத்தமனாது இறுதி வாக்கெடுப்பில் 64-0 என வெற்றிபெற்றுள்ளது.

இந்த நிலையில், திங்கட்கிழமை இரவு ஜெருசலேமில் உள்ள பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள தெருக்களில் சுமார் 20,000 மக்கள் நீலம் மற்றும் வெள்ளை கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உரிமைகளை விட்டுத்தர முடியாது எனவும் சர்வாதிகாரிக்கு அடிபணிய முடியாது எனவும் நெதன்யாகுவிடம் இருந்து இஸ்ரேலை காப்பாற்றுங்கள் எனவும் மக்கள் முழக்கமிட்டனர்.

கூட்டத்தை கலைக்க பொலிசார் தண்ணீர் பீச்சியடித்ஹ்துள்ளதுடன், கண்ணீர் குண்டுகளையும் வீசினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கலில் 19 பேர்கள் வரையில் கைதாகியுள்ளதாக தகவல் வெளியானது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...