குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் காத்திருந்த தாய்: எழுந்த குற்றச்சாட்டு
இலங்கைசெய்திகள்

குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் காத்திருந்த தாய்: எழுந்த குற்றச்சாட்டு

Share

குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் காத்திருந்த தாய்: எழுந்த குற்றச்சாட்டு

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த மௌலீஸ் எனும் 9 மாத குழந்தை இன்றைய தினம் (24.07.2023) திங்கட்கிழமை தாய் பால் அருந்திய நிலையில் பால் புரைக்கேறி உள்ளது.

அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தை உயிரிழந்து விட்டது என வைத்தியர் அறிக்கையிட்டார்.

குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனை
குழந்தையின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் வைத்தியசாலையில் கோரியபோது , யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையை பெற்றே சடலத்தை கையளிக்கலாம் என நெடுந்தீவு வைத்தியசாலையில் கூறியுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியை நெடுந்தீவு வைத்தியர் தொடர்பு கொண்டு கேட்ட போது, குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.

அதனை அடுத்து குழந்தையின் தாயிடம் குழந்தையின் சடலத்தை ஒப்படைத்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி
தாய் , தனது குழந்தையின் சடலத்துடன், நெடுந்தீவில் இருந்து படகில் குறிகாட்டுவான் பகுதிக்கு வந்து, அங்கிருந்து வேலணை வைத்தியசாலை நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து அதில் குழந்தையின் சடலத்துடன் தாய் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயாளர் காவு வண்டியில் எவ்வாறு சடலத்தை ஏற்ற முடியும் என கேள்வி எழுப்பி தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க விடாமல் பல மணிநேரம் குழந்தையின் சடலத்துடன் காக்க வைத்துள்ளனர்.

பின்னர் நீண்ட இழுபறியின் பின்னர் தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க அனுமதித்து, குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் ஒப்படைக்க அனுமதித்துள்ளனர்.

மனிதாபமானமின்றி, குழந்தையின் சடலத்துடன் தாயை நீண்ட நேரம் நோயாளர் காவு வண்டியினுள் காக்க வைத்தமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
gota
இலங்கைஅரசியல்செய்திகள்

நிரந்தர முகவரிகளைச் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு: முன்னாள் ஜனாதிபதி உட்படப் பல முக்கிய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு!

‘அரகலய’ போராட்டத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட...

images 9 1
இலங்கைஅரசியல்செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் ஆயுதங்களே இருந்தன; ஆவணங்கள் கிடைத்துள்ளன – இன்டபோல் விசாரணைக்கும் தயார்: அர்ச்சுனா இராமநாதன் சவால்!

எவ்விதப் பரிசோதனையுமின்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்குள்ளும் ஆயுதங்களே இருந்தன என்பதை மீண்டும் தான் பொறுப்புடன்...

scholarship exam
இலங்கைசெய்திகள்

இலங்கைப் பரீட்சைகள் அட்டவணை 2025/2026: க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், அடுத்த இரண்டு வருடங்களுக்கான (2025 மற்றும் 2026) முக்கிய பாடசாலைப் பரீட்சைகளின்...

MediaFile 11
இலங்கைசெய்திகள்

IMF கடன் திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு: நிறைவேற்று சபை அடுத்த சில வாரங்களில் கூடும் – 2026 வரவு செலவுத் திட்டம் ஆய்வு!

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் (EFF) ஐந்தாவது மதிப்பாய்வைக் கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச...