ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

ரணில் விக்ரமசிங்கவின் வேட்புமனு எதிர்வரும் காலங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அறிவிப்பு வெளியானதும், சில பெரிய மாற்றங்களை பொதுமக்கள் பார்க்கலாம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார். அதற்குப் பதிலாக கடந்த ஆண்டு தேர்தலின் போது அவர் செய்ததைப் போல டலஸ் அழகப்பெருமவின் வேட்புமனுவுக்கு ஆதரவளிப்பார்.

சஜித் பிரேமதாச மீண்டும் தேர்தலில் தோல்வியடைய முடியாது, எனவே அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்.

நாட்டைக் காப்பாற்ற கடந்தாண்டு ரணில் விக்ரமசிங்க முன்வந்தார் என்பது மக்களுக்குத் தெரியும். கடந்த ஆண்டிலிருந்து கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்லவும், நீண்டகால மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மேடையை அமைப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முடியும் என தெரிவித்துள்ளார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 12
இலங்கைசெய்திகள்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை சடுதியாக உயர்வு: ஒரு கிலோ கரட் ரூ.1000 வரை விற்பனை!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு (Dambulla Economic Centre)...

MediaFile 3
செய்திகள்இலங்கை

களனி கங்கை ஆற்றுப்படுகையில் நீர் மட்டம் உச்சம்: ஹங்வெல்ல பகுதியில் பெரும் வெள்ள அபாயம்!

களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்ததன் காரணமாக, ஹங்வெல்ல (Hanwella) மற்றும் அதனை...

images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...