tamilni1 scaled
இலங்கைசெய்திகள்

அரச சேவையில் 18000 பேருக்கு நிரந்த நியமனம்

Share

அரச சேவையில் 18000 பேருக்கு நிரந்த நியமனம்

அரச சேவையில் 18000 பேருக்கு நிரந்த நியமனம்தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு ஊழியர்கள் உட்பட அரச சேவையில் பல துறைகளிலும் உள்ள தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இவ்விடயம் தொடர்பில் நான்கு அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 18 ஆயிரம் ஊழியர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு துறைகளில் காணப்படுவதுடன் அவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத்தில் கூடி இறுதித் தீர்வு ஒன்றை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இது ஒரு அரசியல் பிரச்சினையல்ல. இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என்பதால் அந்த நோக்கத்தில் இந்த பிரச்சினை பார்க்கப்படும். இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதில் நான் உட்பட அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம் என குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...