தமிழ் தரப்பு மீது கொந்தளிக்கும் சுகாஸ்
இலங்கைசெய்திகள்

தமிழ் தரப்பு மீது கொந்தளிக்கும் சுகாஸ்

Share

தமிழ் தரப்பு மீது கொந்தளிக்கும் சுகாஸ்

ரணில் விக்ரமசிங்கவினுடைய கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே நாங்கள் ஊகித்துக் கொண்டபடியால் தான் பேச்சு வார்த்தைக்கே நாங்கள் செல்லவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆன கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (19.07.2023) தனியார் ஊடகம் ஒன்றுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையில் எங்களைத் தவிரத் தமிழ்த் தேசியம் பேசுகின்ற அனைத்து கட்சிகளும் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்று, ரணில் விக்ரமசிங்கவையும் இலங்கையையும் சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச அமைப்புகளிடமிருந்து காப்பாற்றி, இலங்கைக்குக் கடன் பெற்றுக் கொடுத்துவிட்டு இன்றைக்குத் தமிழினத்தின் எதிர்கால இருப்பு இல்லாமல் மூழ்கடித்திருக்கின்றார்கள் என்று தான் கூற வேண்டும்.

தங்களைப் பொறுத்தவரையில் இத்தகைய பேச்சு வார்த்தைக்கு நிபந்தனை இல்லாமல் செல்வது அரசைக் காப்பாற்றுகின்ற ஒரு முயற்சியாகத் தான் அமையும்.

நாங்களும் தமிழ் மக்களும் சமஷ்டிக்குக் குறைந்த எந்த ஒரு தீர்வையும் எண்ணிப் பார்ப்பதற்குக் கூட தயார் இல்லை.

ரணில் விக்ரமசிங்கவோடு தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, மற்றைய தமிழ்த் தேசிய ஜனநாயகக் கூட்டணி போன்ற காட்சிகள் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆவது திருத்தத்தைப் பற்றி கதைக்குச் சென்றது மிகவும் பிழை.

இது தமிழ் மக்களுக்குச் செய்த ஒரு வரலாற்றுத் துரோகம். ஆகவே இப்பொழுது சமஷ்டி கோரிக்கையைக் கைவிட்டு விட்டு ஒற்றை ஆட்சிக்குக் கீழ் கதைக்கப் போனவர்களுக்கு ரணில் விக்ரமசிங்க செருப்பால் அடித்துத் துரத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

பொலிஸ் அதிகாரத்தை, காணி அதிகாரத்தை தர முடியாது என்று சொல்லி இருக்கின்றார்.

ஆகவே இந்த தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளிடம் வினையமாக விடுக்கின்ற கோரிக்கை என்னவென்றால் இனியாவது திருந்திக் கொள்ளுங்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டு நடடந்து கொள்ளுங்கள்.

மீண்டும் மீண்டும் போய் ரணில் விக்ரமசிங்கமையும் ராஜபக்சகளையும் சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றிவிட்டு தமிழினத்தை மீண்டும் மீண்டும் அடகு வைக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...