தபால் திணைக்களத்தில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள் - கிடைக்கவுள்ள நன்மைகள்
இலங்கைசெய்திகள்

தபால் திணைக்களத்தில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள் – கிடைக்கவுள்ள நன்மைகள்

Share

தபால் திணைக்களத்தில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள் – கிடைக்கவுள்ள நன்மைகள்

தபால் திணைக்களம் முழுமையாக நவீனமயப்படுத்தப்படவுள்ளது. இதற்கான நகல் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

தனியார் மற்றும் அரச துறைகள் இணைந்த செயற்றிட்டமாக இந்த நவீனப்படுத்தல் செயற்பாடு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரம் கோடி ரூபா செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் தபால்துறை லாபமீட்டும் நிலைக்கு மாற்றியமைக்கப்படும்.

இந்த வருட இறுதிக்குள் தபால் துறையின் நட்டத்தை 300 கோடி ரூபாவால் குறைப்பதற்கும் அடுத்த வருடமளவில் வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான இடைவெளியை சமப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டளவில் தொடர்ந்தும் திறைசேரியில் தங்கியிருக்காத தபால்துறையை கட்டியெழுப்புவது தமது இலக்காகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...