இலங்கை
மத்திய வங்கி ஆளுநர் விடுத்த வேண்டுகோள்
மத்திய வங்கி ஆளுநர் விடுத்த வேண்டுகோள்
அதிகரிக்கும் பணமோசடியை தடுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு நில வர்த்தக முகவர்களுக்கு(Real estate agents) இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, அண்மையில் நில வர்த்தக துறைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
குறித்த நிகழ்ச்சி திட்டத்தில் நில வர்த்தக துறையில் பணமோசடியை தடுப்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுப்பது போன்ற பொறுப்புகளை வெற்றிகரமாக நடைமுறை படுத்துவதன் மூலம் பல்வேறான அபாயங்களை குறைக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இங்கு தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைக்காக நிதி புலனாய்வு பிரிவு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் நெருக்கமாக செயற்படுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் நில வர்த்தக துறையின் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.
மேலும், நில வர்த்தக துறையில் நிதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக, அத்துறையின் ஒழுங்குமுறை அதிகாரிகளின் பல பரிந்துரைகளை தீவிரமாக பரிசீலிக்குமாறும் மத்திய வங்கி ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.
You must be logged in to post a comment Login