யாழ்.மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!! அனுமதி இலவசம்!
இலங்கைசெய்திகள்

யாழ்.மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!! அனுமதி இலவசம்!

Share

யாழ்.மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!! அனுமதி இலவசம்!

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காராவின் ஏற்பாட்டில் தொழிற்சந்தை நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நிகழ்வின் இணைப்பாளர் பாபு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு எதிர்வரும் 15 மற்றும் 16ம ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இம் மாதம் 15 மற்றும் 16 ம் திகதிகளில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவின் ஏற்பாட்டில் “வடக்கின் ஒளிமயம்” எனும் தொனிப்பொருளில் “Global fair 2023” நடைபெறவுள்ளது.

இரு தினங்களாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் இரவு 7 மணிமுதல் 12 மணிவரை இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.

அனைத்து பார்வையாளர்களுக்குமான அனுமதி இலவசமாக காணப்படும்.

இதில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தொடர்பான ஆலோசனைகள், சந்தர்ப்பங்கள் காணப்படுவதால் வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் பயன்பெறலாம்.

வெளிநாட்டு தொழில்களின் போதான பிரச்சினைக்கு தீர்வு காணும் அமைச்சு , ஊழியர் சேமலாப , நம்பிக்கை நிதியப் பிரச்சினைக்கான தீர்வுகளுடன் தொடர்பான அமைச்சு , தொழிற்துறை சம்பந்தமான வாய்ப்புக்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான அமைச்சு மற்றும் பயிற்சிக்கான அமைப்புக்கள் இத்தொழில் வாய்ப்பு சந்தையில் பங்கெடுக்கின்றன.”என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...