இலங்கையில் பொருட்களின் விலை உயர்வு
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பொருட்களின் விலை உயர்வு

Share

இலங்கையில் பொருட்களின் விலை உயர்வு

நாடளாவிய ரீதியிலுள்ள சந்தைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன.

இறைச்சி, மீன், மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால், நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், அந்த நிவாரணத்தை மோசடி வியாபாரிகள் நுகர்வோருக்கு வழங்காத நிலை காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில வியாபாரிகள் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களுக்குத் தன்னிச்சையான விலையை வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனைத் தடுக்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் எவ்வளவு குறைக்கப்பட்டாலும் நுகர்வோர் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் மக்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்காது எனவும் இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டபபட்டுள்ளது.

சந்தையில் மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதுடன், சில மரக்கறிகள் 250 கிராம் 80, 120 ரூபா போன்ற விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிய மீன்களின் விலை 1000, 1500 ரூபாவை தாண்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...