இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் ! மத்திய வங்கியின் அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் ! மத்திய வங்கியின் அறிவிப்பு

Share

இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் ! மத்திய வங்கியின் அறிவிப்பு

இவ்வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையானது, ஆடை ஏற்றுமதி மூலம் 1843.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த வருடத்தின் ஜனவரியிலிருந்து, மே மாதம் வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில், இவ்ருமானம் 16.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில், இலங்கையானது ஆடை ஏற்றுமதி மூலம் 2206.6 மில்லியன் அமெரிக்க டொலர்கைள வருமானமாக பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார பின்னடைவே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை கடந்த வருடத்தில் முதல் 5 மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.1 வீத வருமானக் குறைப்பு காட்டுவதுடன் ஏனைய முழுமையாக தைத்த ஆடைகள்; மூலம்கிடைக்கும் வருமானம் 19 வீதமாகவும் குறைவடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...