இலங்கை
கட்டுநாயக்கவில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண்
கட்டுநாயக்கவில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் பெண் ஒருவரால் எடுத்துச் செல்ல முயன்ற 05 கிலோ எடையுள்ள ஜெல் வடிவ 04 தங்க பொதிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
விமான நிலையத்தில் உள்ள வரியில்லா வணிக நிலையம்(duty-free shopping) ஒன்றில் பணிப்புரியும் 24 வயதுடைய பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம்(04.07.2023) சோதனையிட்டபோதே குறித்த தங்க பொதிகள் மீட்கப்பட்டதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
விமான நிலையத்தில் உள்ள வரியில்லா வணிக நிலையம் ஒன்றில் பணிப்புரியும் 24 வயதுடைய பெண் நேற்று காலை விமான நிலைய வளாகத்தில் இருந்து சட்ட விரோத தங்க பொதிகளை எடுத்து செல்ல முயற்சித்துள்ளார்.
இந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலைய வரியில்லா வணிக நிலையத்தில், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிகிறார்.
இந்நிலையில் அவரின் செயற்பாடு குறித்து சந்தேகம் எழுந்ததோடு அவரின் செயற்பாடுகளை சிசிடிவி கருவி மூலம் பார்வையிட ஆரம்பித்தோம்.
அவர் நேற்று காலை 08.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல முயற்சித்த போது, 05 கிலோவிற்கும் அதிகமான தங்க ஜெல் அடங்கிய 04 பொதிகளை தனது ஆடைக்குள் மறைத்து வைத்துள்ளார்.
இவரின் செயல்கள் தொடர்பில் எழுந்த சந்தேகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த சட்டவிரோத தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பெண் மற்றும் சட்டவிரோத தங்க பொதிகளை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்ததோடு மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login