செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகள் இலங்கையில்..!
இலங்கைசெய்திகள்

செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகள் இலங்கையில்..!

Share

செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகள் இலங்கையில்..!

நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று தற்சமயம் சில முக்கியமான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது.

அதாவது, செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் இடையில் உள்ள ஒத்த தன்மைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள குறித்த குழு இலங்கை வந்துள்ளது.

நாசாவின் மூத்த விஞ்ஞானியான இலங்கையை சேர்ந்தவரான சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்துள்ளது.

இந்த விஞ்ஞானிகள் குழுவினர் முதலில் இலங்கையின் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் கண்காணிப்பு பயணங்களை மேற்கொண்டு பின்னர் இந்திகொலபலஸ்ஸ மற்றும் உஸ்ஸங்கொட பகுதிகளுக்கு பயணிக்கவுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில், களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் வணக்கத்திற்குரிய கபுகொல்ல ஆனந்தகித்தி தேரர் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையின் புவியியல் அம்சங்கள், செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகள் மற்றும் மண்ணுடன் குறிப்பிடத்தக்க ஒத்த தன்மைகளை கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்தநிலையில், இது தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு, இந்த இரண்டு வகையான பாறைகளுக்கும் சரியான பெயர்கள் சூட்டப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியது மிகவும் அவசியம்.” என தேரர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...