கிளிநொச்சியில் அதிர்ச்சி! 4 சிசுக்கள் உயிரிழப்பு!
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் அதிர்ச்சி! 4 சிசுக்கள் உயிரிழப்பு!

Share

கிளிநொச்சியில் அதிர்ச்சி! 4 சிசுக்கள் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் கடந்த ஒரு வாரத்துக்குள் 4 குழ்ந்தை மரணங்கள் இடம்பெற்றுள்ளதோடு, பிரசவத்தாய் ஒருவரின் கர்ப்பையும் அகற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பொது மக்களின் மத்தியிலும், சுகாதார ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலேயே இடம்பெற்றுள்ளன.

கிளிநொச்சியில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பிரசவத்திற்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற தாய்மார்களில் கடந்த வாரம் மாத்திரம் பிறப்பின் போது நான்கு தாய்மார்களின் சிசுக்கள் இறந்துள்ளன.

அத்தோடு தாய் ஒருவரின் கர்ப்பையும் அகற்றப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் முறையிட்டுள்ளதோடு, மருத்துவர்களின் அக்கறையின்மை மற்றும் உரிய நேரத்தில் உரிய சிகிச்சைகளை வழங்காதுவிட்டடைமேயே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதாவது மருத்துவக் காரணங்களால் தான் தங்களது குழந்தைகள் இறந்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நான்கு சிசுக்கள் இறந்த தருணங்களிலும், பிரசவத்தாயாரது கர்ப்பை அகற்றப்பட்ட சந்தர்ப்பத்திலும் ஒரு குறித்த பயிற்சி மகப்பேற்றியல் வைத்திய நிபுணரே சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இது தொடர்பில் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்கையில், மேலே​ குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தனக்கு கிடைத்துள்ளதாகவும், எனவே தாம் இது தொடர்பான ஆரம்ப புலன் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....