விடுதலைப் புலிகளின் தலைவர் மரணம் தொடர்பில் வாய்திறந்த மைத்திரி
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் மரணம் தொடர்பில் வாய்திறந்த மைத்திரி

Share

விடுதலைப் புலிகளின் தலைவர் மரணம் தொடர்பில் வாய்திறந்த மைத்திரி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடக சந்திப்பு இன்று (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் – நல்லூரில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது.

நான் இறுதி யுத்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல் மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என்றார்.

இது தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறுவதற்கு முயற்சித்த போதிலும் அதனை இராணுவத்தினர் மறுத்திருந்தனர் என தெரிவித்தார்.

எனினும் தாமே இறுதி யுத்தத்தை நடத்தியதாகவும் விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தமக்கே பாரிய பங்கு உள்ளதாகவும் ஜனாதிபதியாக இருந்த போது, மைத்திரிபால சிறிசேன கூறியமை தொடர்பாகவும் ஊடகவியலாளர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு தொடர்ந்தும் பதில் அளித்த மைத்திரிபால சிறிசேன அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச வெளிநாட்டில் இருந்த போதிலும் பாதுகாப்பு சார்ந்த உத்தரவுகளை அவரே வழங்கியிருந்தார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் யுத்தத்தை வழிநடத்திய விடயத்தில் தமக்கு எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளாார்.

தம்மிடம் பொறுப்புகளை கையளித்துவிட்டு ஜனாதிபதி அப்போது வெளிநாடு சென்றிருந்தார் எனவும் முன்னெடுக்கப்பட்டு வந்த செயற்பாடுகளை தாம் தொடர்ந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக எந்தவொரு விடயமும் தமக்கு அறிக்கையிடப்படவில்லை என மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ்,கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...