இலங்கை
இலங்கையில் எரிபொருளின் விலையில் திடீர் மாற்றம்!
இலங்கையில் எரிபொருளின் விலையில் திடீர் மாற்றம்!
இலங்கையில் எரிபொருளின் விலை இன்று(01.07.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்டுள்ள விலை விபரங்கள்
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன்படி புதிய விலை 328 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும்.
லங்கா ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 308 ரூபாவாகவும்.
சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாகும்.
மேலும், மண்ணெண்ணெய்யின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் புதிய விலை 236 ரூபாவாகும்.
இதேவேளை, மின்சார கட்டணங்களும் இன்று(01.07.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம் - tamilnaadi.com