முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி
உலகம்செய்திகள்

28 ஆண்டுகள் பிறகு முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி

Share

முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி!

28 ஆண்டுகள் பிறகு முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பான்சி துள்ளி குதித்து மகிழ்ந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நியூயார்க்கை தளமாக கொண்ட கலிபோர்னியா சரணாலய ஆய்வாகத்தில் வெனிலா என்ற சிம்பன்சி சுமார் 28 ஆண்டுகளாக கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கலிபோர்னியா சரணாலயத்தில் அடைக்கப்பட்டிருந்த வெனிலா தற்போது புளோரிடா சரணாலயத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது, முதல்முறையாக வெளி உலகை பார்த்தது வெனிலா. முதலில் வெளியே வர தயக்கம் காட்டிய வெனிலா சிம்பன்சி, வெளியே வந்து ஆச்சரியமாக அங்கும், இங்கும் வியப்பாக வானத்தை பார்த்தது.

இதன் பின்னர் வெளியே வந்த வெனிலா மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆரவாரம் செய்தது. மற்ற சிம்பன்சி குரங்குகளை வெனிலா கட்டித் தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

இது குறித்து மீட்புப் பணியாளர்கள் கூறுகையில், 28 வயதான வெண்ணிலா என்ற சிம்பன்சி புளோரிடாவில் உள்ள சரணாலயத்தில் முதன்முறையாக திறந்த வானத்தைப் பார்த்தபோது “பிரமிப்பில்” ஆழ்ந்தது என்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நெஞ்சம் மகிழ்ச்சியில் நனைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68fc8352b9138
செய்திகள்இலங்கை

நவம்பர் 5 அன்று நாடு தழுவிய சுனாமி தயார்நிலைப் பயிற்சி: அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவிப்பு!

நாடு முழுவதினையும் உள்ளடக்கி நவம்பர் 5 ஆம் திகதி சுனாமி தயார்நிலைப் பயிற்சியை நடத்த ஏற்பாடுகள்...

image 2c8a8047e8
செய்திகள்இலங்கை

திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை!

திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது என்று இலங்கை தனியார் பேருந்து...

1736086372 accident 2
செய்திகள்இலங்கை

வவுனியாவில் கடந்த 5 ஆண்டுகளில் விபத்துக்களால் 58 பேர் பலி! இந்த ஆண்டு பலி வீதம் அதிகரிப்பு!

வவுனியாவில் (Vavuniya) 2021ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பல்வேறு விபத்து சம்பவங்களினால் 58 பேர்...

MNR NANATTAN ISSUE 3
செய்திகள்இலங்கை

ஆஸ்திரேலிய முதலீட்டாளரை மோசடி செய்த விவகாரம்: மன்னாரில் இருவர் கைது, விளக்கமறியலில்!

மன்னார் மாவட்டத்தில் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவருக்குச் சொந்தமான சுமார் 180 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை...