Untitled 1 102 scaled
இலங்கைசெய்திகள்

இரு மடங்கு அதிகரிக்கும் விலை! வெளியான அறிவிப்பு

Share

அதிகரிக்கும் விலை! வெளியான அறிவிப்பு!

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தமது அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை அதிகரித்துள்ளன.

இதற்கமைய 20 ரூபாவாக காணப்பட்ட அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகள் தற்போது 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜூலை 6 ஆம் திகதி முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை இரண்டு மடங்குகளால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதிர்ஷ்ட இலாப சீட்டின் விலை
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிர்ஷ்ட இலாப சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷாந்த மரம்பகே தெரிவித்திருந்தார்.

இந்த விலை அதிகரிப்புக்கு நிதி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை லொத்தர் சீட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டால், ஒரு லொத்தர் சீட்டுக்கான விற்பனை முகவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 3.75 ரூபாய் தரகு பணம் 8 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இதன்படி தரகு பணத்தை எட்டு ரூபாயாக அதிகரிக்காவிட்டால் லொத்தர் சீட்டுகளை விற்க முடியாத நிலை ஏற்படும் எனவும் லொத்தர் சீட்டுகளின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது தொழிற்சங்கம் போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...