Untitled 1 71 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் இருந்து வந்த அழுத்தம்

Share

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். இனப் பிரச்சினைக்கு இதுவே நிரந்தர தீர்வாக அமையும் என பாஜகவின் தமிழக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார்.

இந்தியாவும், இலங்கையும் மிகத் தொன்மையான நாகரிகத் தொடர்பு உடையவை. 1987 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.
அதன் பிறகு ஏற்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நடவடிக்கைகள், இது வரை முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை எனவும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.

2009-ம் ஆண்டு, வரலாற்றிலேயே மிகத் துயரமான ஆண்டாக அமைந்தது. அதற்கு முக்கியப் பொறுப்பு, அன்றைய காங்கிரஸ்அரசு. தனது கடமைகளில் இருந்தும், இலங்கைப் போரைத் தடுக்க வேண்டிய பொறுப்புகளில் இருந்தும் தவறியது காங்கிரஸ் கட்சி செய்த மன்னிக்க முடியாத தவறு.

2014-ம் ஆண்டுக்குப் பிறகே, பிரதமர் மோடி, இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையை உருவாக்கினார். இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை பிரதமர் மோடி மனமார உணர்ந்திருந்தார்.

கடந்த 9 ஆண்டுகளில், இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு செய்துள்ள பணிகள் ஏராளம் எனவும் தமிழக பாஜக தலைவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடகிழக்கு பகுதி மற்றும் மத்திய பகுதிகளில், இந்திய அரசு தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறது.

கொழும்புடன், யாழ்ப்பாணத்தை இணைக்கும் ரெயில் போக்குவரத்து அமைத்து கொடுத்திருக்கிறது மோடி தலைமையிலான அரசு.
காரைக்கால் காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்க இருக்கிறது.

உலகளாவிய அரசியல் மற்றும் சீனா அரசு, இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீடுகள், கடன் உதவி உள்ளிட்டவை, இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வைத் தாமதப்படுத்தலாம்.
இலங்கை, உலக நாடுகளின் அதிகாரப் போட்டியில் பலியாகி விடக்கூடாது என்பதிலும் இந்திய பிரதமர் மிகவும் கவனமாக இருக்கிறார்.” – எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...