5 2
இலங்கைசெய்திகள்

நெருக்கடியில் இலங்கையின் விமான சேவை

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு வாரங்களில், சுமார் 30 விமான பயணங்களை இரத்து மற்றும் தாமதப்படுத்தியுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் தங்களின் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளத்தை உயர்த்துவதற்கான தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதற்கான காரணமாகும் நேற்று முன்தினம் 8 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலைமை குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக பத்திரகேவிடம் வினவிய போது, ​​தமது விமான சேவை நிறுவனத்திடம் போதிய விமானங்கள் இல்லை என்பதே பிரதான பிரச்சினையாகும்.

அதுமட்டுமின்றி, வேறு சில காரணங்களால் விமானங்கள் இரத்து செய்யப்படுவதுடன் தாமதமாகிவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியின் காரணமாக தங்களது விமான நிறுவனம் தனது சேவையை சிறந்த முறையில் பராமரித்து வருவதில் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...