இலங்கை
இலங்கைக்கு வரும் பிரித்தானியர்களுக்கு புதிய எச்சரிக்கை
இலங்கைக்கு வரும் பிரித்தானிய பிரஜைகளுக்கான போக்குவரத்து ஆலோசனைகளை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ள போதிலும், அவதானமாகச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
தற்போதும் இலங்கையில் சுகாதார மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பற்றாக்குறை நிலவுவதாக தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு பிரித்தானிய பிரஜைகள் 90 ஆயிரம் பேர் கடந்த 2022 ஆம் ஆண்டு பயணம் செய்துள்ளதாகவும், அவர்கள் எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளவில்லை எனவும் பிரித்தானிய வெளிநாட்டு பயண அறிவுறுத்தல் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் பொருளாதார நெருக்கடியால் மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களுக்கான பற்றுக்குறையை இலங்கை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியிலும் சில விடுதிகள், உணவகங்கள், அத்தியாவசிய விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகள் தமக்குரிய அத்தயாவசியப் பொருட்களை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் மட்டப்படுத்தப்பட்ட எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சக்திவலு பற்றாக்குறையே போக்குவரத்து மற்றும் வணிக நடவடிக்கைகயில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் குறித்த இணைத்தயதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், பொருளாதார நிலைமை குறித்த போராட்டங்கள் அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறை கையாளப்பட்ட நிலையில், அதன் விளைவாக காயங்கள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அண்மைய மாதங்களில், போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தப்பட்டதுடன், எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள், வீதி மறியல் மற்றும் அமைதியின்மை குறுகிய அறிவிப்பில் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இங்கு வரும் பிரித்தானிய பிரஜைகள், விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுடன், பெரிய கூட்டங்களை தவிர்க்குமாறும் இந்த பயண ஆலோசனை மற்றும் உள்ளூர் ஊடகங்கள் மூலம் புதிய எச்சரிக்கைகளை அறிந்துக்கொண்டு செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login