23
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 9 திருநங்கைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!!

Share

இலங்கையில் 9 திருநங்கைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!!

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 9 திருநங்கைகள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்ட பிரிவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்ட பிரிவு வெளியிட்ட அறிக்கையில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் HIV தொற்றுக்குள்ளான 9 திருநங்கைகள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும், இவ்வாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மொத்தமாக 165 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான அதிகபட்சமான தொற்றாளர்களின் எண்ணிக்கை இது எனவும், அதிகமான வழக்குகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 2021 ஆம் ஆண்டை விட 2022 இல் பதிவான வழக்குகள் 43 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டமத்தின் பணிப்பானர் வைத்திய கலாநிதி விதானபத்திரன, “மாணவர்களுக்கு பாலியல் கல்வியை முறையாக வழங்குவது அவசியம் எனவும், மக்கள் HIV யைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆணுறையைப் பயன்படுத்துவது அவசியம்” எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...