download 7 1 11
சினிமாபொழுதுபோக்கு

சாலை விபத்தில் பிரபல நடிகை உயிாிழப்பு!

Share

இந்தி திரையுலகில் ‘சாராபாய் vs சாராயாபாய்’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் வைபவி உபத்யா (வயது 30). இவர் தீபிகா படுகோனுடன் இணைந்து ‘சபக்’ என்ற திரைபடத்திலும் நடித்துள்ளார். இவர் திங்கட்கிழமை தனது வருங்கால கணவர் ஜெய் காந்தியுடன் காரில் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள குலுமணாலிக்கு சென்றுள்ளார்.

வைபவி உபத்யா அப்போது பஞ்சர் என்ற பகுதியில் மலைப்பாங்கான சாலையில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகை வைபவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வைபவியுடன் காரில் சென்ற அவரது வருங்கால கணவர் ஜெய் காந்தி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வைபவியின் மறைவு செய்தி பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை வைபவி உபத்யா உடல் நாளை மும்பைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்கு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...