IMG 20221101 WA0007
அரசியல்இலங்கைசெய்திகள்

இளைஞர்களை நெறிப்படுத்தும் சக்தி விளையாட்டுக்களுக்கு உண்டு – சிறீதரன் எம்.பி

Share

எமது இனத்தின் வளரிளம் பருவத்தினரின் சிந்தனாசக்திகளையும், சமூக நலச் செயற்பாடுகளையும் மலினப்படுத்துவதற்காக, அவர்களைத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் சதிச் செயற்பாடுகளுள் சிக்குண்டுபோகாது, முறையான செல்நெறி நோக்கி இளைஞர்களை வழிப்படுத்தும் சக்தி விளையாட்டுக்களுக்கு உண்டு என நான் கருதுகிறேன்.

உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில், உருத்திரபுரம் அன்னையின் கரங்கள் அமைப்பின் அனுசரணையில் நேற்றைய தினம் (2022.10.31) நடைபெற்ற அன்னையின் வெற்றிக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அதன் வெளிப்பாடாகவே உருத்திரபுரம் விளையாட்டுக்கழக இளைஞர்கள் நேர் சிந்தனையோடும், ஒற்றுமைப்பட்ட குழு மனோநிலையோடும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையக்கூடிய பல்வேறு போட்டித்தொடர்களை கிரமமாக நடாத்தி வருகிறார்கள்.

அவர்களது இத்தகு சிந்தனைகளும் செயற்பாடுகளுமே அவர்களது தனிப்பட்ட வளர்ச்சிப் படிகளுக்கும், கழகத்தின் பெருவளர்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளது. இவ் இளைஞர்களின் செயற்பாடுகள் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்” என்றார்.

IMG 20221101 WA0009 IMG 20221101 WA0008 IMG 20221101 WA0006 IMG 20221101 WA0005 IMG 20221101 WA0004

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
amazonlayoffs2 1769144093
செய்திகள்உலகம்

அமேசனில் மீண்டும் ஒரு பணிநீக்கப் புயல்: 16,000 ஊழியர்களை வெளியேற்ற அதிரடி முடிவு!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அமேசன் (Amazon), உலகளாவிய ரீதியில் மேலும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம்...

105585804 gettyimages 1127873434.jpg
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அங்குலானையில் கொடூரம்: காதலியைக் சித்திரவதை செய்து கொன்ற காதலன் தப்பியோட்டம் – போதைப்பொருள் பின்னணி அம்பலம்!

அங்குலானை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இளம் பெண் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிப் படுகொலை...

coal
செய்திகள்இலங்கை

தரம் குறைந்த நிலக்கரி விநியோகம்: விநியோகஸ்தரிடம் இருந்து $2.1 மில்லியன் அபராதம் வசூலிப்பு!

நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லாத நிலக்கரியை விநியோகித்தமைக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து சுமார் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள்...

ba plane
செய்திகள்உலகம்

நடுவானில் கழன்று விழுந்த விமானச் சக்கரம்: லாஸ் வேகாஸில் இருந்து லண்டன் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பரபரப்பு!

லாஸ் வேகாஸில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான...