அழகுக் குறிப்புகள்
பொடுகு பிரச்சினையால் அவதியா? இதனை போக்க சில இயற்கைவழிகள் இதோ
இன்றைக்கு பலரும் பொடுகு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.
ஒழுங்கற்ற பராமரிப்பு, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதினாலும், சரியாக தலை அலசாமல் இருப்பதினாலும், தினமும் தலைக்கு ஷாம்பு போடுவதினாலும் என பல காரணங்களால் பொடுகு வருகின்றது.
இந்த பிரச்சனையை சரிசெய்வதற்கு ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
- பொடுகு தொல்லை தீர உப்பு, உப்பு தலைமுடியில் இருக்கும் பொடுகை வெளியேற்ற மிகவும் பயன்படுகிறது. எனவே உப்பு இரண்டு ஸ்பூன் எடுத்து கொண்டு, சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ளவும். பின்பு அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் மென்மையாக 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு மைல்டு ஷாம்பு போட்டு தலை அலச வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனை விரைவில் குணமாகும்.
- பொடுகு தொல்லை தீர வாரத்தில் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தலை தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்
- பொடுகு நீங்க எளிய முறை நெல்லிக்காய் பொடி, வெந்தய பொடி மற்றும் சிறிதளவு தயிர் சேர்த்து தலை தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு தலை தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.
- எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.
- பொடுகு குணமாக வினீகர் சமமான அளவில் தண்ணீரையும், வினீகரையும் சேர்த்து ஒரு கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள்இந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலை எழுந்தவுடன் . மிதமான ஷாம்புவால் தலை முடியை அலசுங்கள்.
#dandruff #Hairtips
You must be logged in to post a comment Login