Connect with us

சமையல் குறிப்புகள்

பால் இல்லாமல் பன்னீர் செய்யலாம்! எப்படி தெரியுமா?

Published

on

panneer 1

நாம்அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் தான் பன்னீர்.

இந்த பன்னீரை நீங்கள் கடைகளில் தான் வாங்கி சமைத்திருப்பீர்கள். ஆனால் இதை எளிதில் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

அந்தவகையில் வீட்டிலே எளியமுறையில் பால் இல்லாமல் பண்ணீரை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையானவை

  • வேர்க்கடலை
  • வினிகர்
  • சூடான தண்ணீர்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் இரண்டு கப் அளவுக்கு வேர்க்கடலை எடுத்துக் கொண்டு நன்றாக கழுவவும். அந்த கிண்ணம் முழுவதும் சூடான தண்ணீரை நிரப்பி கழுவிய வேர்க்கடலைகளை அதில் போட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

பிறகு அந்த வேர்க்கடலையை எடுத்து நன்றாக உலர்த்தி அதனுடன் கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கெட்டியான பசை போன்ற நிலைக்கு வரும் வரை நன்றாக கலக்கவும். வேர்க்கடலைகள் நன்றாக பொடியாக அரைத்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

ஒரு லிட்டர் அளவு தண்ணீர் நிரப்பி, அதனுடன் நாம் ஏற்கனவே செய்து வைத்த வேர்க்கடலை கலவையை சேர்த்துக் கொள்ளவும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அந்த வேர்க்கடலை கலவையானது தண்ணீருடன் நன்றாக கரையும் படி கலக்க வேண்டும். இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை நன்றாக கலக்கிய பிறகு அடுப்பை நிறுத்தி விடவும்.

இப்போது ஒரு துணியை எடுத்துக்கொண்டு அந்த கலவையை அந்த துணியில் இட்டு அதன் அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து நன்றாக பிழிய வேண்டும். அவ்வாறு செய்யும்போது அந்த வேர்க்கடலையில் உள்ள பாலானது துணி வழியாக வடிகட்டப்பட்ட அந்த பாத்திரத்தில் சேமிக்கப்படும்.

இவ்வாறு இரண்டிலிருந்து மூன்று முறை நன்றாக பிழிந்து வடிகட்டிய பின்னர் துணியில் அரைத்த வேர்க்கடலை மட்டும் கசடாக தேங்கி நிற்கும். அதனை நாம் கடலை மிட்டாயோ அல்லது வேர்கடலை அல்வாவோ செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

பால் சேமிக்கப்பட்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமாக சூடாகும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சூடாகும் நேரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வினிகரும் நான்கு டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீரும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அடுப்பில் உள்ள பாலானது கொதி நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது அரை டேபிள் ஸ்பூன் அளவு நீர்த்த வினிகரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அவ்வாறு செய்து கொண்டிருக்க பால் ஆனது திரிந்து தயிர் போல வரும்போது மீதமுள்ள வினிகரையும் பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் உள்ள ஏடு போன்ற அமைப்பு தண்ணீரில் இருந்து பிரிந்து வரும் வரை நன்றாக கலக்க வைக்கின்றோம்.

அந்த ஏட்டினை வினிகர் கலவையில் நீண்ட நேரம் வைத்திருக்காமல் விரைவிலேயே அதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வடிகட்டுவதற்கு ஏற்ற வகையில் ஒரு பெரிய பாத்திரம் மற்றும் அதன் மீது வடிகட்டுவதற்கு பயன்படுத்தப்படும் துணியை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அந்த ஏடு போன்ற கரைசலை அதனுடன் மீது செலுத்தி, வடிகட்டி தண்ணீரை முழுவதுமாக அதில் இருந்து பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அதில் உள்ள வினிகரின் வாசனையை நீக்குவதற்கு 2-3 கப் வரை தண்ணீர் சேர்த்து கலக்கும்போது வினிகரின் வாசனை நீங்கிவிடும்.

இப்போது அந்தப் பன்னீரை வடிகட்டும் துணி நூல் வைத்து நன்றாக பிழிய வேண்டும். அதில் உள்ள நீர் முழுவதும் வெளியேறும் வரை பிழிந்த பிறகு அதை ஒரு மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு மேல் வைத்தால் பன்னீர் மிகவும் காய்ந்தது போன்று ஆகிவிடும்.

இப்போது வீட்டிலேயே செய்த பால் இல்லாத சுவையான பன்னீர் தயார்.

குறிப்பு

உபயோகப்படுத்தியது போக மீதம் உள்ள பன்னீரை ஒரு கிண்ணம் முழுவதும் தண்ணீரை நிரப்பி அதனுள் அந்த பன்னீரை வைத்து ஃப்ரிட்ஜ்- ல் வைத்து இரண்டு நாள் வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்50 minutes ago

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 26.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 11, செவ்வாய்க் கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். கும்ப ராசியில் உள்ள அவிட்டம், சதயம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 23.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 8, சனிக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள உத்திராடம், திருவோணம் சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 7 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 24 ஞாயிற்று கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 23, சனிக் கிழமை, சந்திரன்...