பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு நடனம் ஆடினார்கள்.
அது மட்டுமன்றி அவர்களது கடின உழைப்புக்கு பிக்பாஸ் ஜோடி டைட்டில் வின்னர் என்ற பெருமையும் கிடைத்தது .
அமிர் தனது காதலை வெளிப்படையாக கூறியநிலையில் பிக் பாஸ் ஜோடி டைட்டில் வின்னர் வென்ற பின்னர் முதல் முறையாக வெளிப்படையாக தனது காதலை பாவனி ரெட்டி வெளிப்படுத்தி உள்ளார்.
இதனை அடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்யும் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமீர் மற்றும் பாவனி ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
#Amir #Bhavani
Leave a comment