மருத்துவம்
உலர்திராட்சையை தொடர்ந்து எடுத்து கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா?
உலர் திராட்சை பிரியாணி, பாயசம் ,ஸ்வீட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் உலர் திராட்சையை அழகிற்காகவும், சுவைக்காகவும் நாம் பயன்படுத்துவதுண்டு
உலர் திராட்சையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள், தாமிரம், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
தற்போது உலர் திராட்சை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- ரத்தசோகை உள்ளவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோய் சரியாகும்.
- ரத்தசோகை ஏற்படும். இவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோய் சரியாகும்.
- உலர் திராட்சையை தினமும் உட்கொண்டால் உடல் சூடு தனித்து, உடல் எடை அதிகரிக்கும்.
- உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இந்த பொட்டாசியம் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகிறது.
- மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உலர்திராட்சையை தொடர்ந்து எடுத்து கொண்டால், அந்த நோயில் இருந்து விடுபடலாம்.
- உலர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.
- நார்ச்சத்து நிறைந்த உலர் திராட்சையை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
- எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்க உலர் திராட்சைப் பயன்படுகிறது.
- தினமும் காலையில் சிறிது உலர்ந்த திராட்சையை சாப்பிட்டால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
#HealthTips #Raisins
You must be logged in to post a comment Login