நடிகர் விஜய் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
இவரது ஒவ்வொரு அசைவையும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். உடனுக்குடன் அதை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தும் வருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் இவருக்கு அக்கவுண்ட் உள்ளது. ஆனால் ஃபேஸ்புக்கில் இவர் பதிவுகளை இடுவதில்லை.
இந்நிலையில் இளைஞர்கள் அதிகமாக பார்த்துவரும் உபயோகித்துவரும் இன்ஸ்டாகிராமில் விஜய் இணையவுள்ளதாக தற்பாது தகவல் கிடைத்துள்ளது.
இதற்காக actorvijay என்ற Profile உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் அவரது இந்தப் பக்கம் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#vijay #instagram
Leave a comment