சினிமா
நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
சமீபத்தில் ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்காக பல பிரபலங்களும் ரசிகர்களும் நடிகர் சூர்யாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி இன்று வெளியாகி ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடிகர் சூர்யாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#suriya #mkstalin
தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
வானமே எல்லை!
— M.K.Stalin (@mkstalin) June 29, 2022
You must be logged in to post a comment Login