அழகுக் குறிப்புகள்
முகத்தை பொலிவுடன் வைத்திருக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்!
முகம் பொலிவோடு இருக்க, இன்றைக்குப் பலரும் பல வழிகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.
அதற்காக மார்க்கெட்டில் கிடைக்கும் புதுப் புது கிரீம்களைப் பூசிக்கொள்வது உண்டு. இதனால் பக்கவிளைவுகளே ஏற்பட கூடும்.
எவ்வித பக்கவிளைகளுமின்றி ஒரு சில இயற்கை முறை மூலம் கூட முகத்தை பொலிவுடன் வைத்து கொள்ள முடியும் . தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம்.
- பப்பாளி பழத்தின் துண்டு மற்றும் அதனுடன் ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் 15 நிமிடங்கள் பூசவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தில் இருந்த இறந்த செல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, முகம் பொலிவுடனும், மென்மையாகவும் இருப்பதைக் காண முடியும்.
- பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மறைந்துவிடும்.
- பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் முளைப்பது தடைபடும்.
- நறுக்கிய பப்பாளி துண்டுகளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும்.
- பப்பாளி மாஸ்க்கை போட்டால் கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மறைந்துவிடும். பப்பாளி பேக் கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குவதுடன், கூந்தலை மென்மையானதாகவும் மாற்றுகிறது.
#LifeStyle #Beauty #Skincare
You must be logged in to post a comment Login