WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 2
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (05.05.2022)

Share

Medam

medam

பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் சுமூகமாக உறவைப் பேணுவீர்கள்.

காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.சிக்கலான வேலைகளை சிறப்பாக முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

வேகமும் விவேகமும் கலந்து வியாபாரத்தை நடத்துவீர்கள். மனை இடங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும்.

Edapam

edapam

தொழிலை விரிவுபடுத்த வங்கி லோன் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு உற்சாகத்தைக் கொடுக்கும்.

குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் படிப்புச் செலவுகளை பக்குவமாக சமாளிப்பீர்கள்.

சவாலான காரியங்களில் விரைந்து வெற்றி அடைவீர்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும்.

 

Mithunam

mithunam

வெளிநாட்டில் இருந்து வர வேண்டிய முக்கிய தகவல்கள் தாமதமாகும். அரசுத் துறை பணியாளர்கள் அலட்சியமாக நடக்க வேண்டாம்.

சக ஊழியர்களின் விவகாரங்களில் தலையிடாதீர்கள். அதிகமான உழைப்பால் வியாபாரம் வெற்றி பெறும்.

குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படும். பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணியுங்கள். கடன் சுமை அதிகரிக்கும்.

 

                                                                                           Kadakam

kadakam

வேலை காரணமாக சில நாட்கள் குடும்பத்தை பிரிவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள்.

உறவினர் வகையில் மனத்தாங்கல் உருவாகும். நண்பர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இல்லை.

எதிர்ப்புகளைத் தாண்டி தொழிலை நடத்த வேண்டி வரும். நடைபாதை வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாவார்கள். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களால் சுகவீனம் ஏற்படும்.

Simmam

simmam

தங்க நகைகள் வாங்கி இல்லத்தரசிகளை மகிழ்ச்சி படுத்துவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள்.

தொழில் துறையில் ஏற்றம் ஏற்படும். சிறு வியாபாரங்கள் சீராக நடக்கும். வேகம் காட்டி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள்.

நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளை சரி செய்வீர்கள். பங்குச்சந்தைகள் சிறந்த லாபத்தை தரும்.

 

                                                                                                            Kanni

kanni

வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் வீடு கட்ட திட்டம் தீட்டுவீர்கள். பணியாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவார்கள்.

குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். கிடைக்குமா என்று நினைத்த பணம் எதிர்பாராமல் கைக்கு வரும்.

பம்பரமாக சுழன்று புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். நெருக்கடிகளைத் தாண்டி வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள்.

                                                                                                                                                                     

                                                                                         Thulaam

thulaam

பணியாளர்கள் ஓவர் டைம் பார்த்து சம்பாதிப்பார்கள். ஒர்க் ஷாப் நடத்துகிறவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

டீக்கடை பெட்டிக் கடைக்காரர்கள் திருப்தியான லாபம் பெறுவார்கள்.

ஏற்கனவே கொடுத்த பழைய பாக்கிகள் வசூலாகி மனத் திருப்தி ஏற்படும். கட்டிடத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கும். பதவி உயர்வுக்காக காத்திருந்தவர்கள் சாதகமான பலனை அடைவார்கள்.

 

                                                               

                                                                                                     Viruchchikam

viruchchikam

புத்திசாலித்தனமாக தொழிலை நடத்த வேண்டும். வியாபாரத்தில் வரும் வில்லங்கங்களை அறிவுக் கூர்மையால் விலக்க வேண்டும்.

வெளியூர் பயணங்களில் தடை உண்டாகும். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய செய்திகள் தாமதமாகும்.

குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். டீக்கடையில் அமர்ந்து விவாதம் செய்யாதீர்கள். சந்திராஷ்டம காலம். பொறுமை தேவை.

 

Thanusu

thanusu

விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் கூடுதலான லாபம் பார்க்க பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் தேவையான நிதி உதவி கிடைக்கும்.

அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். எந்தச் செயலையும் தைரியமாக முடிப்பீர்கள்.

 

Maharam

magaram

விளையாட்டுக்குப் பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்காதீர்கள். மனைவியோடு மல்லுக் கட்ட வேண்டாம்.

தொழிலை மேம்படுத்த கடுமையாகப் பாடுபடுவீர்கள். சிறிய கம்பெனிகள், இரும்பு நிறுவனங்கள் முன்னேற்றம் காணும். தள்ளுவண்டி வியாபாரிகள் தன்னிறைவு பெறுவார்கள்.

நடைபாதை கடைக்காரர்கள் நல்ல லாபம் அடைவார்கள். அலைந்து வேலை பார்ப்பவர்களுக்கு அதற்கேற்ற பலன் கிடைக்கும்.

Kumbam

kumbam

கடன் வாங்கி குடும்பத் தேவையை நிறைவு செய்வீர்கள்‌. பணியாளர்கள் சம்பளப் பற்றாக்குறையால் சங்கடப் படுவார்கள்.

எதிர்பார்த்து கிடைக்காத பணம் சிலருக்கு எதிர்பாராமல் வந்து சேரும். குடும்பச் செலவு அதிகரிக்கும்.

டீக்கடை முதலாளிகள் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். பெட்டிக்கடையில் சில்லறை வியாபாரம் சிறப்பாக நடக்கும். கணவருக்கு உடல் பாதிப்பு வந்து நீங்கும்.

 

Meenam

meenam

 

குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்கள். எதிர்பார்த்ததைவிட வியாபாரத்தில் லாபம் பெருகும்.

எலக்ட்ரீசியன்களுக்கு வேலை பார்க்க நேரம் போதாது. கொத்தனார்கள் இடைவிடாமல் வேலை பார்ப்பார்கள்.

பழைய சாமான்கள் வாங்கி விற்பவர்களும் நல்ல பலனைப் பெறுவார்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு பண உதவி செய்வீர்கள்.

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 3
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 23 மே 2025 : சரஸ்வதி யோகத்தால் செயல்பாடுகள் சிறக்கும் ராசிகள்

மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும்....

tnadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 22 மே 2025 : Daily Rasi Palan

இன்றைய ராசிபலன் 22.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 8, வியாழக் கிழமை, சந்திரன் கும்பம்...

tnadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 21 மே 2025 – இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க பேச்சில் இனிமை தேவை

இன்றைய ராசிபலன் 21.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 7, புதன் கிழமை, சந்திரன் கும்பம்...