உலகம்
உக்ரைனுக்குப் பெருமளவு இராணுவ உதவி! – ஜோ பைடன் அறிவிப்பு
உக்ரைனுக்கு 800 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ரஷ்யா தொடுத்துள்ள போரை எதிர்கொள்வதற்கு உக்ரைன் போதிய ஆயுதங்கள், தளபாடங்கள் இன்றி தவிக்கின்றது.
இந்நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் சுமிஹால் இன்று (21) வொஷிங்டன் சென்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு 800 மில்லியன் டொலர் இராணுவ உதவியை ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கடந்த வாரமும் இதே அளவிலான உதவியை அமெரிக்கா அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
மேலும், உக்ரைன் அரசின் நடவடிக்கைகளுக்காகவும், சம்பளம் வழங்கவும், சேவைகளை ஆற்றவும் உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்குவதாக அமெரிக்க நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
#WorldNews
You must be logged in to post a comment Login