Medam
வளர்பிறை சந்திரன் வாட்டத்தை போக்குவார். நினைத்த காரியம் நடக்கும். எந்த வகையிலும் பண வரவு உண்டாகும்.
தொழிலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். உறவினர்களின் உதவியால் உற்சாகமடைவீர்கள்.
வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். மனைவி மக்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள்.
Edapam
மனதிற்கு நிம்மதி தரும் நல்ல காரியங்கள் நடக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக திரும்பும்.
பெரியோர்களின் ஆதரவுடன் தொழில் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வாகனம் வாங்குவதற்கும் யோகமுண்டு.
பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பம் கலகலப்பாக நடக்கும். பண வரவில் தட்டுப்பாடு இருக்காது.
Mithunam
சகோதர சகோதரிகளுக்கு பணம் செலவு செய்வீர்கள். தொழில் சுமாராக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.
பங்குப் பரிவர்த்தனையில் சாதகமாக இல்லை. வியாபாரம் சரளமாக நடக்கும். தேவையான லாபம் கிடைக்கும்.
வெளியூர் பயணங்கள் வெற்றி தரும். கொடுத்த கடன் திரும்ப தாமதமாகும். நண்பர்களின் உதவி நல்ல பயனை தரும்.
Kadakam
தேவையில்லாத அலைச்சலால் உடல் சோர்வடையும்.அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வமாக இருப்பீர்கள்.
அதனால் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். அதேநேரத்தில் செலவுகள் கைமீறிப் போகும்.
குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தோன்றும். உடல் நலத்தில் அக்கறையாக இருங்கள்.
Simmam
எதிர்பார்த்த காரியம் நடக்கவில்லை என்று ஏக்கம் அடையாதீர்கள். இதுவும் கடந்து போகும். காரியத்தடைகள் கலங்க வைக்கும்.
கேட்ட இடத்தில் கடன் கிடைப்பது சுணக்கமாகும். தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். போட்டி பந்தயங்கள் பலன் தராது.
மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். சிக்கனமாக இருங்கள்.
Kanni
தேடி வரும் செல்வங்கள். ஓடி வரும் உதவிகள். வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்து லாபத்தை தரும்.
மனைவி மக்கள் உங்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்.தனியார் துறையில் வேலை செய்பவர்கள்.
நல்ல பலனை அடைவார்கள். செய்யும் தொழிலில் லாபம் கொழிக்கும். வெளியூர் பயண வெற்றிகளால் மனம் உற்சாகம் அடைவீர்கள். செல்வாக்கு உயரும்.
Thulaam
நியாயத்தின் பக்கமே நீங்கள் நிற்பீர்கள். அது உங்களுக்கு புதிய அந்தஸ்தை கொடுக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த சோகம் விலகும்.
புதிய முயற்சிகள் நல்ல பலனைத் தரும். கேட்ட இடத்தில் தட்டாமல் பணம் வரும். நீண்ட கால ஆசை நிறைவேறும்.
தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
Viruchchikam
உங்கள் உதவியால் ஒருவரின் நோய் குணமாகும்.போட்ட முதலீட்டுக்கு தகுந்த லாபம் கிடைக்கும்.
பிள்ளைகள் மனம் கோணாமல் நடப்பார்கள். வாகனம் வாங்குவீர்கள். வெளியிடங்களிலிருந்து பயனுள்ள தகவல் கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். தெய்வ தரிசனம் கிட்டும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்கு அடித்தளம் போடுவீர்கள். போட்டி பந்தயங்கள் வெற்றி தரும்
Thanusu
தொழிலில் போட்டி நிலவும். புத்திசாலி தனத்தால் எதிரிகளை முறியடிப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் கைகொடுக்கும்.
கடன் கட்டுக்குள் இருக்கும். தொழில் சரளமாக நடக்கும்.வியாபாரத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியாது.
வாகனங்களில் பழுது ஏற்படலாம். கல்லூரி செலவுகள் கையை கடிக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கு செலவு வரும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
Maharam
புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். வழக்குகள் சிக்கலை ஏற்படுத்தும். அரசாங்க அதிகாரிகள் உதவி கிடைக்காது.
எதிர்பார்த்த இடத்தில் பணவரவு தாமதமாகும். வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். குடும்பத்தில் மன சங்கடம் உண்டாகும்.
நண்பர்கள் உதவியால் தடைகள் தாண்டுவீர்கள். வெளியூர் பயணங்களை தவிருங்கள். சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
Kumbam
நீங்கள் எதிர்பார்த்திருந்த காரியம் ஈடேறும். தொழிலை விரிவுபடுத்த திட்டம் போடுவீர்கள்.
குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். இக்கட்டான நேரத்தில் மனைவி உதவி செய்வார்.
கணினித் துறையினருக்கு கணிசமான பலன் உண்டு. நிலம் விற்பனை நினைத்தபடி நடக்கும். இரும்புத் தொழில் அமோக பலன் தரும்.
Meenam
உடலில் சிறு உபாதைகள் உண்டாகும். மருந்து மாத்திரைகளுக்கு செலவு செய்வீர்கள். அடுத்தவரின் பிரச்சனையில் தலையிடாதீர்கள்.
மனைவியின் ஆலோசனையை மதித்து நடங்கள். பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்காதீர்கள். வியாபாரத்தில் லாபம் குறையும்.
முழுக் கவனத்தையும் வேலையில் செலுத்துங்கள். தொழில் துறைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
#Astrology
Leave a comment