Medam
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். வேலையில் இருந்த மந்த நிலை மாறும்.
அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது.
Edapam
இன்று வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
நண்பர்களுடன் பேசுவது மனதில் மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவீர்கள்.
Mithunam
இன்று தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும்.
கணவன் மனைவி இடையே பிரச்சினை தீரும். அரசு துறை சார்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
உங்களின் நிதி தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் நலமடையும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.
Kadakam
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வேலையில் இன்று உங்களுக்கு போட்டி பொறாமைகள் குறையும்.
வீண் செலவுகளால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கலாம். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
பெற்றோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களது அன்பை பெற முடியும்.
Simmam
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும்.
சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பெரிய அளவில் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும்.
Kanni
இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம்.
உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும்.
Thulaam
உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
Viruchchikam
பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.
மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
வீட்டில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
Thanusu
இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வேலையில் இருப்பவர்கள் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வீடு பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.
Magaram
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பண வரவு தாராளமாக இருக்கும்.
புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
Kumbam
இன்று உடன் பிறந்தவர்கள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி வட்டார தொடர்புகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
சுப காரிய பேச்சுவார்த்தைகளைத் தவிர்க்கவும். தடை தாமதங்கள் உண்டாகும்.
வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
Meenam
உங்களுக்கு சின்ன சின்ன மன அழுத்தங்கள் இருக்கலாம். கவனமாக இருக்கவும். பயணங்கள் வேண்டாம் வீட்டிற்குள்ளேயே இருங்க.
வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் வரும் உங்களின் வருமானம் இரட்டிப்பாகும்.
உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். சகோதரர்கள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும்.
.#Astrology
Leave a comment