செய்திகள்அரசியல்இலங்கை

வடக்கில் மேலும் பல நிலங்கள் வனவள திணைக்களத்தினருக்கு!!!

Share

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 706 ஹெக்டேயரை சுவீகரித்துள்ள வனவளத் திணைக்களம் இன்னமும் 7 ஆயிரத்து 297 ஹெக்டேயரை சுவீகரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சுவீகரிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பின் 42 சதவீதம் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும். மேலும், போரின் பின்னரே, 37 இடங்கள் வனவளத் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ.) ஊடாக இந்தத் தகவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 ஆயிரத்து 299 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2019ஆம் ஆண்டே சுவீகரிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 53 ஆயிரத்து 852 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 6 இடங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 73 ஆயிரத்து 362 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 8 இடங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 253 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 10 இடங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் 72 ஆயிரத்து 940 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 7 இடங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

வனவளத்திணைக்களம் வழங்கிய தகவலில் சுவீகரிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 152 ஹெக்டேயரும், வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 25 ஹெக்டேயரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 595 ஹெக்டேயரும், மன்னார் மாவட்டத்தில் 516 ஹெக்டேயரும் உள்ளடங்குகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...