காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞர் மீது யுவதியின் உறவினர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் மொட்டையடித்துஅனுப்பியுள்ளனர்.
குறித்த சம்பவம் கலேவல-வீரகலவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹொரவபொத்தானை பிரதேசத்திலிருந்து இரண்டு வருடமாக பழகிய யுவதி, வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததையடுத்து பார்வையிட சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இதன்போது அங்கு யுவதியின் உறவினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு தனது தலை முடியை வெட்டி, கண் இமைகளையும் வழித்து, தனக்கு காயம் ஏற்படுத்தியதாக குறித்த காதலன் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளானவர் ஹொரவபொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர்மீது தாக்குதல் நடத்தியவர் குறித்த பெண்ணின் தந்தை எனவும் அவருடன் பக்கத்து வீட்டார் இருவரும் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்தார்.
தாக்குதல் நடாத்திய யுவதியின் தந்தை கூறுகையில், இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு வந்து கதவை தட்டியதனால் அவர்மீது தாக்குதல் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஹொரவபொத்தானை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment