டோங்கோவை தாக்கிய சுனாமியால் அள்ளுண்டு சென்று ஒன்றரை நாட்களுக்கு மேல் கடலில் தத்தளித்த மனிதர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இதில் அட்டாடா தீவைச் சேர்ந்த லிசாலா போலா என்பவரையே கடலுக்குள் சுனாமி பேரலை இழுத்துச் சென்றுளடளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
கடல் அலைகள் என்னை நோக்கி வருவதை கண்டு பயந்தேன். ஆனால், கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது.
நான் நீரில் இருந்தபோது, கடல் எட்டு முறை என்னை அதன் கீழ் இழுத்து சென்றது எனக்கு நினைவிருக்கிறது. என் கால்கள் செயலிழந்தன. அவை செயல்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.
ஒரு கட்டத்தில் கடல் என்னைச் சுழற்றி நீருக்கடியில் அழுத்திச் சென்றது.பின்னர், கடல் மேல்பரப்பில் மிதந்த மரக்கட்டையை தன்னால்பிடிக்க முடிந்தது.
எனது மகன் நிலத்திலிருந்து அழைப்பதை என்னால் கேட்க முடிந்தது. நான் பதிலளிக்க விரும்பவில்லை, ஏனென்றால் என்னைக் கண்டுபிடிக்க அவன் கடலுக்குள் இறங்கி நீந்துவதை நான் விரும்பவில்லை. வெறும் மரத்தடியைப் பிடித்துக்கொண்டு நான் சுழன்றுக்கொண்டிருந்தேன் என்றார்.
Leave a comment