download 1
செய்திகள்உலகம்

உலகளாவிய முஸ்லீம் பெண்களுக்கு தலிபான்கள் இட்ட கட்டளை!!

Share

உலகளாவிய முஸ்லீம் பெண்களுக்கு தலிபான்கள்புதிய கட்டளை சட்டத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானின் காபூலைச் சுற்றி பெண்கள் தலையை மறைக்கும் வகையில் புர்கா அணிய வேண்டும் என கட்டளையிடும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.

தலிபானின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான அமைச்சகம் குறித்த சுவரொட்டிகளை காட்சிப்படுத்தியுள்ளதாக தலிபான் ஊடகப்பிரதானி கருத்து வெளியிட்டுள்ளார்.

கபேக்கள் மற்றும் கடைகளில் பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தாவின் படத்தை சித்தரித்து ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், “ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும்” என எழுதப்பட்டிருக்கிறது.

இது ஷரியத் சட்டத்தை பின்பற்ற முஸ்லீம் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் அதிகாரத்திற்குத் திரும்பியதில் இருந்து, தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரங்களை அதிகளவில் குறைத்துள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கு முன்பாக சாலையில் நீண்ட தூரம் செல்லும் பெண்கள் ஒரு ஆண் உறவினர் துணையுடன் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், வாகனங்களில் இசையை ஒலிப்பதையும் தடை செய்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...