கடந்த 15 ஆம் திகதி காணாமல் போன சிறுமியின் உடல் உருகுலைந்த நிலையில் நேற்றைய தினம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி கடந்த 15 ஆம் திகதி தன்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்று வீடு திரும்பாததால் குறித்த சிறுமியை பொலிஸாரும் இராணுவத்தினரும் தீவிர தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கமைய நேற்றைய தினம் குறித்த சிறுமியின் சடலம் சகோதரியின் வீட்டிலிருந்து 50 மீற்றர் தொலைவில் கைவிடப்பட்ட காணியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் வலது கையை நாய் கடித்து துண்டித்துள்ளதாகவும், சிறுமியின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட பலத்த காயமே சிறுமியின் மரணத்துக்கு காரணம் என்றும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
சிறுமியின் சகோதரியின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment