06 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒரே நாளில் 549 பேர் கைது: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் போக்குவரத்து விதிமீறல்களும் அடக்கம்!

Share

இலங்கை பொலிஸாரினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 549 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது மொத்தம் 29,608 பேர் சோதனையிடப்பட்டுள்ளனர்.

குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 26 பேர், நீதிமன்றத்தினால் பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்த 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பிலும் பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய 309 சாரதிகள், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,392 பேர் ,கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைக் குறைக்கவும் இத்தகைய சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...