06 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், இரத்தினங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Share

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் இரத்தினக்கற்கள் உள்ளிட்ட சொத்துக்களை, அவரது சகோதரரான இஃப்லால் அஹமட்டிடம் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (25) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தச் சொத்துக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யக் கடந்த காலங்களில் சி.ஐ.டி-க்கு போதிய அவகாசம் வழங்கப்பட்டும், அவர்கள் அதனைச் செய்யத் தவறியுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார். இந்த உத்தரவை ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தத் தவறினால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதவான் எச்சரித்தார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடுவது தவறான செயலாகும் எனத் தெரிவித்த அவர், எக்காரணம் கொண்டும் மேலதிக அவகாசம் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தற்போது மத்திய வங்கியின் பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சொத்துக்கள் தனக்குச் சொந்தமானவை எனக் கூறி, தாக்குதல்தாரிகளின் சகோதரரான இஃப்லால் அஹமட் சட்டத்தரணி ஊடாகத் தொடர்ந்த மனுவிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இல்ஹாம் அஹமட் மற்றும் இன்ஷாப் அஹமட் ஆகியோரின் சகோதரரே இந்த இஃப்லால் அஹமட் ஆவார். சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...