26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

Share

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும் பாரிய நிதி ஆதாரங்கள் குறித்தும் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், போராட்டத்தின் பெயரால் இளைஞர்களின் உணர்வுகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகச் சாடினார். “அன்று வீதிக்கு இறங்கித் தாக்குங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி இளைஞர்களைத் தூண்டியவர்கள் இன்று அரசாங்கத்தின் உயரிய பதவிகளில் அமர்ந்து அரசாள்கிறார்கள். ஆனால், அவர்களை நம்பி வீதிக்கு வந்த இளைஞர்கள் இன்று நீதிமன்றங்களையும் தூக்குமேடைகளையும் எதிர்கொள்கிறார்கள்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

இந்தப் போராட்டம் தன்னிச்சையாக உருவானது அல்ல என்றும், இதன் பின்னணியில் திட்டமிடப்பட்ட வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் இருப்பதாகவும் நாமல் சந்தேகம் வெளியிட்டுள்ளார். போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் (அமர கீர்த்தி அத்துகோரள) பகிரங்கமாக அடித்துக் கொல்லப்பட்டமை மற்றும் பொதுச்ொத்துக்கள் எரிக்கப்பட்டமை ஆகியவற்றுக்கு யார் பொறுப்பு என்பது கண்டறியப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதாகக் கூறினால், முதலில் அரகலயவின் உண்மையான முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என அவர் சவால் விடுத்துள்ளார். இந்தப் போராட்டத்தை வழிநடத்தியவர்கள் மற்றும் அதற்குப் பின்னால் இருந்து இயக்கிய ‘சூத்திரதாரிகள்’ குறித்துத் தெளிவான விசாரணை நடத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் இத்தகைய வன்முறைப் கலாச்சாரம் நாட்டைச் சீரழித்துவிடும் என அவர் எச்சரித்தார்.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...