1770558011 Sri Lanka Child Abuse NCPA 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள்: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிக்கை

Share

நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை 4,289 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 1998ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை திருத்தங்களுக்கு அமைய, சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தச் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் சுமார் 1,683 வழக்குகள் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் தொடர்பான ஆபாச வெளியீடுகளைப் பரப்புதல், பாலியல் ரீதியான செயற்பாடுகளுக்காகச் சிறுவர்களை வாடகைக்குப் பெறுதல் அல்லது பணியில் அமர்த்துதல் மற்றும் நேரடிப் பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற பாரதூரமான குற்றங்கள் தொடர்பாகச் சட்டமா அதிபரினால் இந்தத் குற்றப்பத்திரிகைகள் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியைப் பெற்றுத் தரவும் நீதித்துறை ஊடாகத் தீவிரமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...