1770515691 MADEL 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாடு தழுவிய ரீதியில் கரைவலை கடற்றொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு: கொழும்பில் தொடரும் போராட்டம்

Share

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கரைவலை கடற்றொழிலாளர்களும் இன்று (09) முதல் தமது தொழில் நடவடிக்கைகளிலிருந்து காலவரையறையின்றி விலகிச் செயற்படத் தீர்மானித்துள்ளனர். கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு, கடந்த 05 ஆம் திகதி முதல் கரைவலை கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாகவே, இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் தொழிலைப் புறக்கணிப்பதாகக் கடற்றொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசாங்கம் இவ்விடயத்தில் உரிய தலையீட்டை மேற்கொண்டு தமக்கான தீர்வைப் பெற்றுத் தரும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...