Screenshot 20251211 014558 Facebook
செய்திகள்இலங்கை

முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து வங்கி அட்டைத் திருட்டு: பொலன்னறுவை நபர் களுத்துறையில் கைது!

Share

வங்கி ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின் வங்கி அட்டைகளைத் திருடி வந்த 42 வயதுடைய நபர் ஒருவரைத் தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி தெற்கு களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அரச வங்கி ஒன்றில் கடமையில் இருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரைச் சோதனையிட்டதில் இந்த மோசடி அம்பலமானது.

சந்தேக நபரிடமிருந்து அவருக்குச் சொந்தமில்லாத 11 வங்கி அட்டைகள் மற்றும் வேறொரு நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.பொலன்னறுவையைச் சேர்ந்த இவருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக ஏற்கனவே பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.

வங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தத் தெரியாத முதியவர்களைக் குறிவைக்கும் இந்நாபர், அவர்களுக்கு உதவுவது போல் நடித்து இரகசியக் குறியீட்டை (PIN) அறிந்துகொள்வார். பின்னர், கைதேர்ந்த முறையில் அவர்களின் அட்டையைத் திருடிவிட்டு, வேறு ஒரு போலியான அட்டையை அவர்களிடம் கொடுத்துவிட்டுத் தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது முன்பின் தெரியாதவர்களின் உதவியைப் பெறுவதைத் தவிர்க்குமாறும், எக்காரணம் கொண்டும் உங்களது இரகசிய இலக்கத்தை மற்றவர்களிடம் பகிர வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...