Tamil News lrg 409614920251201060429
செய்திகள்இலங்கை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாக வரமாட்டார்கள்!

Share

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை மறுதினம், பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கத் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்முறை வாக்காளர் கணக்கெடுப்பில் மிக முக்கியமான மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்காகக் கிராம உத்தியோகத்தர்கள் இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது.

எனவே, தமது வீட்டில் உள்ள வாக்காளர்களின் பெயர்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் புதிதாக உள்ளடக்கப்பட வேண்டிய பெயர்கள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.

இந்தத் தகவல் திரட்டும் நடவடிக்கை அடுத்த இரண்டு மாத காலத்திற்குத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். திருத்தப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய பெயர் பட்டியல் காட்சிப்படுத்தல் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் மே மாதம் 05 ஆம் திகதி வெளியிடப்படும்.

மே 05 முதல் 28 நாட்களுக்குள் பொதுமக்கள் தமது உரிமைகோரல்கள் (Claims) மற்றும் ஆட்சேபனைகளைச் (Objections) சமர்ப்பிக்க வேண்டும்.

தகைமை இருந்தும் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அல்லது தகுதியற்றவர்களின் பெயர்கள் உள்ளமை குறித்து ஆட்சேபனை தெரிவிப்போர் இதற்கான விண்ணப்பங்களைப் பயன்படுத்தலாம்.

அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களைத் தத்தமது பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமிருந்தோ அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமது ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து ஒத்துழைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்துப் பிரஜைகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...