Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

Share

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதவான் நீதிமன்றப் பிரதான நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீன் முன்னிலையில் இன்று (28) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதிகளான பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேர் சார்பாக முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தலைமையிலான 6 சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

பிரதிவாதிகள் தரப்பில் பிணை கோரப்பட்ட போதிலும், பொலிஸார் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய கடும் ஆட்சேபனைகளை அடுத்து, பிணைக் கோரிக்கையை மன்று நிராகரித்தது.

சந்தேகநபர்களுக்கு எதிராக உத்தியோகபூர்வமாகக் குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தமது தரப்பினால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை (FR) மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிவாதிகள் தரப்பு தெரிவித்தது. அந்த வழக்கிற்காகத் திருகோணமலை நீதிமன்றத்தின் தற்போதைய விசாரணைகளின் குரல் பதிவுகள் மற்றும் எழுத்துப்பூர்வ அறிக்கைகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள டச்பே கடற்கரைப் பகுதியில், உரிய அனுமதியின்றி கட்டுமானங்களை எழுப்பியமை மற்றும் மத அடையாளங்களை நிறுவியமை தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடற்கரைப் பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் சட்டங்களை மீறியதாகத் தொடரப்பட்ட இந்த வழக்கு, திருகோணமலை பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...