Appropriation Bill 2025 Submitted in Parliament by Harini Amarsuriya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டு மக்கள் விரும்பினால் இப்போதே வீடு செல்லத் தயார்: நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆவேச உரை!

Share

தமக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் நேற்று (23) காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

“எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. பிரதமர் பதவியில் மாற்றம் வேண்டும் என நாட்டு மக்கள் தீர்மானித்தால், நான் இப்போதே வீட்டிற்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் கட்டுப்படுவது நாட்டு மக்களுக்கும் எனது மனசாட்சிக்கும் மட்டுமே” எனப் பிரதமர் சபையில் தெரிவித்தார்.

ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவதாகக் கூறி தோல்வியடைந்த எதிர்க்கட்சியினர், இப்போது பிரதமரை வீட்டுக்கு அனுப்பும் ‘பகல் கனவு’ காண்கிறார்கள். அது ஒருபோதும் பலிக்காது என அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர்,இச்சட்டம் பல்கலைக்கழக கட்டமைப்பை அரசியல்மயமாக்கும் என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டை அவர் மறுத்தார். 1978-ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

தரம் 6 முதல் 13 வரை மாணவர்களுக்கு நடைமுறைக்குச் சாத்தியமான, சர்வதேச சவால்களை எதிர்கொள்ளக்கூடிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு.

தரம் 6 பாடப்புத்தகத்தில் ஏற்பட்ட தவறை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அதனைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில வாரங்களாகத் தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகம் மற்றும் கல்வி மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சி அறிவித்திருந்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நேற்றைய விவாதம் அமைந்திருந்தது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...